வர்த்தகர் அணி செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் ஜி.எஸ்.டி. குறித்த கலந்துரையாடல் மற்றும் விளக்கக் கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விளக்கக் கூட்டம் சென்னை கொத்தவால் சாவடி கச்சி மேமன் ஜமாத் அரங்கில் இன்று (28/07/2017) நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் மாநில தலைவர் எம்.முகைதீன் தலைமை தாங்கினார். வர்த்தகர் அணி மாநில செயலாளர் ஜே.அஜ்மல் கான் அனைவரையும் வரவேற்றார். மாநில இணை செயலாளர் கே.எஸ்.கலீல் ரஹ்மான், மாநில பொருளாளர் கே.எம்.லோகநாதன், மத்திய சென்னை மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் டைகர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, ஜி.எஸ்.டி. வரியால் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அதிக வரி விதிப்பால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பால் வர்த்தகம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது குறித்தும் உரையாற்றினார். மேலும், பல்வேறு உற்பத்தி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் அப்போது வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட வணிக வரித்துறையின் ஓய்வுபெற்ற முன்னாள் உதவி ஆணையர் சுப.வைத்தியநாதன் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவின் வட சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமல வெற்றிராஜன் ஆகியோர் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்த விளக்கத்தை வர்த்தகர்களுக்கு அளித்தனர். தொடர்ந்து ஜி.எஸ்.டி. குறித்த விளக்கக் கேள்விகளுக்கு தெளிவான பதில்களையும் அளித்தனர்.

இறுதியாக மத்திய சென்னை மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.பக்ருதீன் நன்றியுரையாற்றினார்

Related posts

SDPI கட்சியின் மாநில பொருளாளர் இல்லத் திருமண விழா

admin

கோவையில் நிலவேம்பு_கசாயம் விநியோகம்!

admin

வர்த்தகர் அணி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி

admin