வழக்கறிஞர் அணி செய்திகள்

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணியின் சட்டக்கருத்தரங்கம்

எஸ்.டி.பி.ஐ. கட்சி வழக்கறிஞர் அணி சார்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (செப்.23) சட்டக்கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் வழக்கறிஞர் எம்.அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் வழக்கறிஞர் சுலைமான் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, என்.சி.ஹெச்.ஆர்.ஓ. மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி.பா.மோகன், எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ராஜா முகமது ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியாக வழக்கறிஞர் அணியின் சென்னை மாவட்ட செயலாளர் ஷேக் முகம்மது அலி நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் முகமது முபாரக், மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது ஃபாரூக், ஏ.கே.கரீம் மற்றும் வழக்கறிஞர் அணியின் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்:

தமிழக உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

நீதிபதிகள் தேர்வில் அரசியல் தலையீடு இல்லாத நிலையை உறுதிசெய்ய வேண்டும்:

நீதிபதிகள் தேர்வில் சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கிணங்க சமயசார்பற்ற முறையில் அனைத்து மதத்தை சார்ந்த தகுதி படைத்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக போராடி 69 சதவீதம் இடஒதுக்கீடு பெற்ற நிலையிலும், மத சிறுபான்மை, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பெண்கள், ஆதிவாசிகள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவம் நீதித்துறை நியமனத்தில் குறிப்பாக உயர்நீதிமன்றத்தில் இல்லை என்பதை சமீபகால நீதிபதிகள் நியமனங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், நீதிபதிகள் தேர்வில் அரசியல் தலையீடுகள் இருப்பதன் காரணமாகவே சங்க்பரிவார இயக்கச் சிந்தனையும், பாசிச மனப்பான்மையும் கொண்ட நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதனால் நீதிபதிகள் தேர்வில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ அரசியல் தலையீடு இல்லாத நிலையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

மியான்மர் அகதிகளுக்கு அபயம் அளிக்க வேண்டும்:

மியான்மர் நாட்டில் ஆளும் அரசால் நிகழ்த்தப்பட்டுவரும் ரோஹிங்கியா மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவெறி தாக்குதல் காரணமாக, வாழ்வுரிமை பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

உயிருடன் வாழ்வததற்கான உரிமையே முற்றிலும் மறுக்கப்பட்டவர்களாக உயிரை பணையம் வைத்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியாக்களை சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் பிரகாரம் அப்பாவி அகதிகளுக்கு அபயம் அளிக்க வேண்டியது இந்தியாவின் கடமை மட்டுமல்ல, கடந்தகாலங்களில் இந்தியா பின்பற்றிவந்த நடைமுறையுமாகும் என்பதால் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட்டு, ரோஹிங்யாக்களுக்கு இந்திய அரசு அடைக்கலம் அளிக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

Related posts

வேலூரில் வழக்கறிஞர்கள் நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

admin

தூத்துக்குடியில் நடைபெற்ற சட்டவிழிப்புணர்வு முகாம்

admin

வழக்கறிஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம்

admin