வழக்கறிஞர் அணி செய்திகள்

நெல்லையில் வழக்கறிஞர் அணி நடத்திய சட்ட கருத்தரங்கம்

நெல்லை மாவட்ட SDPI கட்சி வழக்கறிஞர் அணி சார்பில் வழக்கறிஞர்களுக்கான சட்ட கருத்தரங்கம் நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள லாரா பாரடைஸ் மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் எ.முஹம்மது ஷஃபி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எஸ்.பி. சர்தார் அரஃபாத் B.A., L.L.B., அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர்கள் பி.செந்தில், எ.முஹம்மது உசேன், கே.பி.எஸ்.எ. ஷாஹுல் ஹமீது, கே.பிரபாகரன், கே.செந்தில் குமரன், முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக், SDPI கட்சியின் வழக்கறிஞர்கள் அணியின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் S.A.S அலாவுதீன், மனித உரிமை ஆர்வலர் மா.பிரிட்டோ ஆகியோர் வழக்கறிஞர்களின் தேவையும் இன்றைய சூழ்நிலையும், நசுக்கப்படும் மனித உரிமைகள், நீட்டும் நீதியும் ஆகிய தலைப்புகளில் கருத்துரை வழங்கினார்கள்.

இறுதியாக SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எம்.ஆரிஃப் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இதில் பெருந்திரளாக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

வேலூரில் வழக்கறிஞர்கள் நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

admin

வழக்கறிஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்

admin

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணியின் சட்டக்கருத்தரங்கம்

admin