• முகப்பு
  • தேசிய செய்திகள்
  • பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் காப்பகங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள், எஸ்.டி.பி.ஐ. கண்டன தீர்மானம்
தேசிய செய்திகள்

பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் காப்பகங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள், எஸ்.டி.பி.ஐ. கண்டன தீர்மானம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி அவர்களின் தலைமையில் சென்னை, மாநில தலைமையகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலக்குழுக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 08ஆம் தேதி அன்று நடைபெற்றது. நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

1.கலைஞர் டாக்டர் கருணாநிதி மறைவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய செயலகக்குழு ஆந்த இரங்கல்:

மண்ணின் மைந்தர் கலைஞரின் மறைவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மொத்த திராவிட சமுதாயத்தின் துயரத்தில் பங்கேற்கிறது. மாநில சுயாட்சிக்கும், கூட்டாட்சி முறைக்கும் கருணாநிதி முன்னோடியாக திகழ்ந்தார். சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் நடத்தி வந்த போராட்டத்திற்கும், அவரது மறைவால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய இழப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி உணர்கிறது. தமிழ்நாட்டில் அவர் நடத்திவந்த அரசியலின் மாண்புகளோடும், இன்றைய மறைவிலும் எஸ்.டி.பி.ஐ. அரசியல் ரீதியாக பங்கேற்கிறது. தமிழக தேர்தல் களத்தில் அவர் போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் ஐந்து முறை தமிழக முதல்வராகப் பணியாற்றியிருக்கிறார். மக்கள் அரசியலில் அவரது பங்களிப்பு பிரமாண்டமானது.

2.நீதிபதி ஜோசப்பின் பணிமூப்பு(சீனியாரிட்டி) குறைப்பு, விஷமத்தனமானது:-

அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தின் கவுரவத்திற்கும், மாண்புகளுக்கும் சரிசெய்ய முடியாத அளவிற்கு பா.ஜ.க. அரசு, நீதியரசர் கே.எம்.ஜோசப்பின் பணிமூப்பை(சீனியாரிட்டி) குறைந்திருக்கிறது. முதலில், ஜனவரி மாதம் “கொலுஜியம்” வழங்கிய பரிந்துரைப்படி நீதியரசர் இந்து மல்கோத்ராவுடன் சேர்த்து நீதியரசர் ஜோசப்பையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க மறுத்துவிட்டது. அப்போது இந்து மல்கோத்ராவுக்கு மட்டும் மத்திய அரசு தனது ஆதரவை தெரிவித்து விட்டு ஜோசப்பின் பெயரை திருப்பி அனுப்பிவிட்டது. அதன்பின் “கொலிஜியம்” மே 11 மற்றும் ஜூலை 16 ஆகிய தேதிகளில் மீண்டும் தனது பரிந்துரையை அனுப்பியது. இப்போது மத்திய அரசு, நீதியரசர்கள் இந்திரா பானர்ஜி, நீதியரசர் வினித் சரண் ஆகியோருக்கு முதல் இரண்டு பணிமூப்பு இடங்களை கொடுத்துவிட்டு, நீதியரசர் ஜோசப்பிற்கு மூன்றாவது இடத்தை அளித்துள்ளது. இந்தச் செயல் தற்போது பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏன்னென்றால், மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீர்ப்பளிக்கும் நீதியரசர்களை ஆர்வம் குன்றச் செய்து, நீதித்துறையின் அடித்தளத்தையே சுக்கு நூறாக கிழித்தெறியும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது. எனவே, மத்திய அரசு இந்த விஷமத்தனங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலக்குழு வலியுறுத்துகிறது.

3.பாட்னா மற்றும் தியோரியோ பெண்கள் நிவாரண விடுதியில் பாலியல் வன்கொடுமை:-

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்கள் காப்பகங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயலகக்கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

இந்தியாவின் அனைத்து துறைகளிலும் பெண் வாழ்வாதாரத்திற்கு அதிகரித்து வரும் ஆபத்தான நிலை குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது ஆழ்ந்த வேதனை மற்றும் கவலையை தெரிவித்துக்கொள்கிறது. நாடு முழுவதும் தொடர்ந்து 900 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளைக் கூட பா.ஜ.க. தலைவர்கள் விட்டு வைக்காதது, பீகாரில் பாட்னா நகரிலும், உ.பி.யில் தியோராவிலும், அரசு மானியத்தோடு நடத்தப்படும் பெண்கள் நிவாரண விடுதிகள் குறித்து பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கரை படாத கரங்களுடன் சுத்தமாக இருக்கத் தவறிவிட்டன.ஆட்சி அதிகாரத்திற்கு நெருங்கிய தொடர்புடையவர்களாக குற்றவாளிகள் இருப்பதால், அவர்களை அரசுகள் பாதுகாக்கின்றன என்ற பொதுவான நிலையை உருவாக்கியுள்ளது. பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் மகளிர் விரைவு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு, கடும் தண்டனை வழங்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலக்குழு கோரிக்கை விடுக்கிறது.

4.சிறுபான்மையினர் தேசிய கமிஷனுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து:
தேசிய மனித உரிமைகள் கமிஷன் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் ஆகியவற்றிற்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது போல், தேசிய சிறுபான்மையினர் கமிஷனுக்கும் அரசியல் சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. சிறுபான்மையான மக்கள் பல வழிகளிலும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், நீதி நிலைப்பெறச் செய்யவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் சிறுபான்மையினர் தேசிய ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றும், உடனடியாக சிறுபான்மையினர் தேசிய கமிஷனுக்கு அரசிய சட்ட அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலகக்குழு வலியுறுத்துகிறது.

5.யுபிஎஸ்சி (UPSC) அதிகார குறைப்பு:
மத்திய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தேசிய அமைப்புகளை வழுவிலக்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. திட்டக்குழு யூஜிசி, ஐசிஎச்ஆர் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் அமைப்பு யு.பி.எஸ்.சி ஆகும். குடிமைப்பணி அதிகாரிகளை நியமணம் செய்யும் போது வழக்கமாகப் பின்பற்றும் முறையை பின்பற்றாமல், மத்திய அரசு பணிகளில் இணைச் செயலாளர்களை நேரடியாக நியமிக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்களை நியமித்து விட்டு எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டு சலுகை கிடைக்காமல் செய்யப்படுகிறது. இதை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலகக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

6.தேசத்தின் கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்:
தேசத்தின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர் குலைக்கும் வகையில் கோழைத்தனமாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சுயாட்சியும், சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் கூட்டப் பிரிவு 35 ஏ-வை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கேட்டுக்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் சுயாட்சி அதிகாரத்தை பாதுகாப்போம் என்று நாட்டு மக்களுக்கு மத்திய அரசு உறுதி மொழியை கொடுத்து தனது கை சுத்தமானது என்று மத்திய அரசு வெளிக்காட்ட வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது மத்திய அனைத்து துறைகளிலும் அடைந்திருக்கும் தோல்வியில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சியே ஆகும். சங்கபரிவார அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் செயல்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலகக்குழு வலியுறுத்துகிறது.

Related posts

சுவாமி அக்னிவேஷுடன் SDPI தேசிய துணைத்தலைவர் சந்திப்பு

admin

எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இணைந்த தஸ்லீம் அஹமது ரஹ்மானி

admin

ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை ரத்து: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர்!

admin