தேசிய செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா, தொடர் களப்பணியில் எஸ்.டி.பி.ஐ

கேரளத்தில் வரலாறு காணாத மழை, வெள்ளம்

ஆயிரக்கணக்கான செயல்வீரர்களுடன் குழு அமைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சினர் கேரள மக்களின் துயர் துடைக்க தொடர் சேவையாற்றி வருகின்றனர்!

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் வரலாறு காணாத மழையால் கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

இச்சூழலை அறிந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில தலைமையகம் தங்களது ஆயிரக்கணக்கான செயல்வீரர்களை கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் படகு மூலம் வெள்ள மீட்பு பணிகள் துவங்கி, நிவாரணப் பொருட்கள் வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு முதல் கட்டமாக முகாம்களை ஏற்படுத்தி கொடுத்தல், உணவு பொருட்கள் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை இரவு,பகல் பாராமல் ஆயிரக்கணக்கான செயல்வீரர்களுடன் தொடர்ந்து சேவை செய்து வருகிறது.

கேரள மக்களின் துயர் துடைத்திட எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக சேவை எண்களும் தொடர்புக்காக கொடுக்கப்பட்டு தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறது.

Related posts

ஃபாலஸ்தீனியர்களுக்காக ஜெருசலத்தை மீட்டெடுப்போம்; எஸ்.டி.பி.ஐ

admin

உபியில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறலை கண்டித்து SDPI கண்டன ஆர்ப்பாட்டம்!

admin

ஜார்க்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட்டுக்கு தடை-எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

admin