வர்த்தகர் அணி செய்திகள்

வர்த்தகர் அணியின் சுதந்திரதின கொண்டாட்டம் – ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

இந்திய திருநாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி தலைமை சார்பில், சென்னை பிராட்வேயில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வர்த்தகர் அணி மாநில தலைவர் மொய்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தேசிய கொடியேற்றிவைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா, வர்த்தகர் அணி மாநில செயலாளர் அஜ்மல் கான், துணை செயலாளர்கள் கோவை கரீம், மேட்டுப்பாளையம் சஃபீக் அஹமது, கலீல் ரஹ்மான், பொருளாளர் லோகநாதன் மற்றும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் டைகர் அலி உட்பட மத்திய சென்னை, வட சென்னை மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related posts

சென்னையில் வர்த்தகர் அணி நடத்திய இஃப்தார் நிகழ்வில் மாநில தலைவர் பங்கேற்பு.

admin

கோவையில் நிலவேம்பு_கசாயம் விநியோகம்!

admin

எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் ஜி.எஸ்.டி. குறித்த கலந்துரையாடல் மற்றும் விளக்கக் கூட்டம்

admin