தேசிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி வாழ்த்து

 

திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவர் பருவந்தொட்டு கட்சியின் தொண்டனாக இருந்து படிப்படியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்து, அந்த பொறுப்புகளை திறம்பட சிறப்பாக நிறைவேற்றிய தளபதி மு.கஸ்டாலின் அவர்களின் கரங்களில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வகித்த தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்டாலின் அவர்களின் இடைவிடாத உழைப்புக்கு கிடைத்த பரிசாகவே பார்க்கிறேன்.

மதவாதத்துக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் வழியில் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்து தமிழகத்தை வழிநடத்திட வேண்டும். மேலும், அவர்களுக்குப் பிறகு திராவிட இயக்கத்தை காக்கிற, திராவிட இயக்கத்தை வழிநடத்துகிற திராவிட இயக்கத் தலைவராகவும் ஸ்டாலின் அவர்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், மதசார்பற்ற சக்திகளுக்கு தலைமையேற்றிடவும், மென்மேலும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பணிகள் சிறக்கவும் வாழ்த்துகின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

மதிமுகவின் முப்பெரும் விழா மாநாட்டில் SDPI தேசிய துணைத்தலைவர் பங்கேற்று வாழ்த்துரை

admin

ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை ரத்து: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர்!

admin

புல்வாமா பயங்கரவாத தாக்குதல்! –  எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

admin