• முகப்பு
  • தேசிய செய்திகள்
  • ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை ரத்து: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர்!
தேசிய செய்திகள்

ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை ரத்து: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர்!

ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு அம்மாநில அரசு தடை விதித்ததை ராஞ்சி உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது; “ஜார்கண்ட் மாநில அரசு இந்த விவகாரத்தில் இயற்கை நீதியைப் பின்பற்றவில்லை என்று ராஞ்சி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இதன்மூலம் மாநில அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக நடந்த ஜனநாயக மக்கள் போராட்டங்களையும், மக்கள் இயக்கங்களையும் நசுக்கும் ஜார்கண்ட் அரசு, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது தோற்கடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டங்கள் வெற்றி பெறும் என்பதையும் இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது.

தங்கள் மீது திணிக்கப்பட்ட தடையை எதிர்த்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வெற்றி பெற்றிருப்பதை எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராட்டுகிறது. தடை விதிக்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர்களும், தொண்டர்களுக்கும் ஜனநாயக நடைமுறையிலும், நீதிமன்றத்தின் மீதும் காட்டிய நம்பிக்கையையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராட்டுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைப் போல கிட்டதட்ட ஒரு டஜன் அமைப்புகள் ஜார்கண்டில் தடை செய்யப்பட்டன. இந்த அமைப்புகளும் இதேபோல் நீதிமன்றம் மூலம் தங்களுக்கான நீதியைத் தேட வேண்டும். ஒருங்கிணைந்து எடுக்கப்படும் முயற்சிகள், பாசிச அரசுகளின் நடவடிக்கைகளைத் தோற்கடித்துவிடும்.

உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் இந்த தீர்ப்பின் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பா.ஜ.க. அரசுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதோடு மக்களின் ஜனநாயக நடவடிக்கைகளை குறிவைப்பதையும் நிறுத்த வேண்டும்.”

மேற்கண்டவாறு எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

மதிமுகவின் முப்பெரும் விழா மாநாட்டில் SDPI தேசிய துணைத்தலைவர் பங்கேற்று வாழ்த்துரை

admin

தலித் தலைவர் ஆஸாத்தை விடுதலை செய்ய வலியுறுத்தி மாபெரும் போராட்டம்

admin

சுவாமி அக்னிவேஷுடன் SDPI தேசிய துணைத்தலைவர் சந்திப்பு

admin