• முகப்பு
  • மாநில செய்திகள்
  • திராவிடக் கழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் வரைவுத் தீர்மானத்திற்கு எஸ்.டி.பி.ஐ முழு ஆதரவு!
மாநில செய்திகள்

திராவிடக் கழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் வரைவுத் தீர்மானத்திற்கு எஸ்.டி.பி.ஐ முழு ஆதரவு!

திராவிடக் கழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் வரைவுத் தீர்மானத்திற்கு எஸ்.டி.பி.ஐ. முழு ஆதரவு!

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் 76 ஆம் திருத்தம் – 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்று சட்ட வலிமை பெற்று நடைமுறையில் செயலாக்கம் பெற்று வருகிறது. இதனை எதிர்த்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, தமிழக அரசு சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று(29.08.2018) காலை 10 மணியளவில் சென்னை, பெரியார் திடலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் ஆகியோர் கலந்து கொண்டு வரைவுத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தனர்.

தீர்மானம்: 1 (அ)

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் 76 ஆம் திருத்தம் – 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்று சட்ட வலிமை பெற்று நடை முறையில் செயலாக்கம் பெற்று வருகிறது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

எல்லா வகையிலும் பாதுகாப்பான இந்த சமூகநீதி சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில் திறமையும், அனுபவமும், சமூகநீதியில் அக்கறையும் கொண்ட மூத்த வழக்குரைஞர்களை நியமித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் விரைவாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசினை இந்தக் கலந்துரையாடல் கூட்டம் வலியுறுத்துகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு – 69 சதவிகித இட ஒதுக்கீடு இவற்றைப் பாதுகாத்திட இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சியின் கீழ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் – இவ்விரண்டிலும் முறையே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும் முக்கிய பங்கு இருப்பதால், அ.இ.அ.தி.மு.க. அரசு – உச்சநீதி மன்றத்தில் நடைபெறும் இவ்வழக்கில் கூடுதல் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும், அக்கறையுடனும் செயல்படவேண்டிய கடமை உணர்வு கூடுதலாக இருக்கிறது என்பதையும் இக்கலந்துரையாடல் கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் திணிக்கப்பட்டுள்ள கிரிமீலேயரையே நீக்கவேண்டும் என்று சமூகநீதியாளர்கள் வலியுறுத்திக் கொண்டு இருக்கும் இக்காலகட்டத்தில், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரிமீலேயர் தேவை என்ற பொருளிலும், பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்டம் 77 ஆம் திருத்தம் உறுதி செய்துள்ள நிலையில், இது குறித்தும் உச்சநீதிமன்றம் இப்பொழுது கேள்வி எழுப்பியுள்ளதானது – சமூகநீதி மீதான பெரும் அச்சுறுத்தலேயாகும். இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உரிய அளவு கவனம் செலுத்தவேண்டும் என்றும், பிரதமரைச் சந்தித்த அழுத்தம் கொடுப்பது, டில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்துவது உள்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 1 (ஆ)

முதுநிலை மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் உள்ள (2018-19) 10,449 இடங்களில் 205 இடங்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ளன. இதுவும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திடவேண்டும்.

தீர்மானம்: 1 (இ)

மேற்கண்ட கருத்துகளை மய்யப்படுத்தி, நாடு தழுவிய அளவில் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும், தேவையான போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், இக்கூட்டத்தில் திமுகவின் வி.பி.துரைசாமி, காங்கிரஸ் கமிட்டியின் ஆ.கோபண்ணா, உ.பலராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன், இந்திய சமூக நீதி இயக்கம் பேராயர் எஸ்றா.சற்குணம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்க தலைவர்கள் பங்கெடுத்தனர்.

அனைத்துக் கட்சி கூட்டத்தின் இதர புகைப்படங்களை காண சொடுக்கவும்

https://flic.kr/s/aHsmmG8UcU

Related posts

மக்கள் நலன், தமிழக நலனை முன்னிறுத்தி அமமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி – எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத் தலைவர் அறிவிப்பு

admin

ஜனநாயகம் தழைத்திட சபதமேற்போம்!

admin

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு SDPI கட்சியின் மாநில தலைவர் வாழ்த்து

admin