மாநில செய்திகள்

திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாநகரம் இந்திய அளவில் பனியன் தொழிலுனுடைய வளர்ச்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி, கடந்த 2017ஆம் வருடம் பனியன் தொழிலுனுடைய மொத்த உற்பத்தி ரூ.27 ஆயிரம் கோடியாக இருந்தது தற்போது ரூ.23 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. இந்தியாவில் விளைகின்ற பருத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்ற தட்டுப்பாடுகளால் இந்த தொழில் நலிவடைந்து வருகின்றது. அத்தோடு மட்டுமில்லாமல் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்கு பின்னால் இந்த தொழில் மிகவும் நலிவடைந்து விட்டது.

எனவே, மத்திய அரசு பருத்தி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். அததோடு ஜி.எஸ்.டி.யிலிருந்து பனியன் தொழிலுக்கு முழு விதிவிலக்கு வழங்கவும், கடந்த அரசுகள் வழங்கி வந்த பனியன் தொழிலுக்கான டியூட்டி டிரோபிக் சலுகையை மீண்டும் கொண்டுவர வேண்டும், பனியன் தொழில் நலிவடைந்து வருவதை கண்டு அதனால் பாதிக்கப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழிலதிபர்கள், அதனைச் சார்ந்திருக்கின்ற ஊழியர்களுடைய வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் அப்துல் காதர், திருப்பூர் சிஸ்மா பொதுச்செயலாளர் பாபுஜீ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தின் கோரிக்கைகளை பதிவிட்டனர்.

Related posts

சிரியாவில் நடைபெறும் மனித படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம்

admin

தமிழக அரசின் பேருந்து கட்டண குறைப்பு அறிவிப்பு! கண்துடைப்பு நடவடிக்கை

admin

டாக்டர் கலைஞரின் நினைவுகள் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு!

admin