மாநில செய்திகள்

சுவாமி அக்னிவேஷ்வுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. பங்கேற்பு!

பாசிச தாக்குதலை முறியடிப்போம்! ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்போம்!! “சுவாமி அக்னிவேஷ்” அவர்களுடன் சென்னை, நிருபர்கள் சங்கத்தில் இன்று (30.08.2018) மாலை 04 மணியளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் நாட்டில் நடைபெற்றுவரும் ஃபாசிச தாக்குதல்கள் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மோடி அரசால் நடத்தப்பட்டுவரும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை குறித்து உரையாற்றினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன், அப்துல் சமது, சுப.உதயகுமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Related posts

சிரியாவில் நடைபெறும் மனித படுகொலையை கண்டித்து சென்னையில் போராட்டம்

admin

திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம்

admin

ஜனநாயகம் தழைத்திட சபதமேற்போம்!

admin