மாநில செய்திகள்

டாக்டர் கலைஞரின் நினைவுகள் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு!

தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் டாக்டர் கலைஞரின் புகழ் நினைவுகள் நிகழ்ச்சி சென்னை அசோகா ஹோட்டலில் எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இன்று(18.09.2018) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்திற்கு தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாஃப் அவர்கள் வருகை தந்து பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் ஆகியோரை சந்தித்து நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.

தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் டாக்டர் கலைஞரின் புகழ் நினைவுகள் நிகழ்ச்சி சென்னை அசோகா ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார். மேலும், இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் மாநில தலைவர் முகைதீன், துணை பொதுச்செயலாளர் கலீல் ரஹ்மான், மத்திய சென்னை மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் சாஹுல் ஹமீது, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஜாக் உட்பட கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு

admin

சென்னையில் நடைபெற்ற “நாடாளுமன்ற தேர்தலும், நமது பொறுப்பும் ” கலந்துரையாடல் நிகழ்ச்சி! – SDPI தேசிய துணைத்தலைவர் பங்கேற்பு!

admin

மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் துணைநிலை ஆளுநரை கண்டித்து புதுவை முதல்வர் தர்ணா! – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு

admin