மகளிர் அணி செய்திகள்

திருச்சியில் நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில செயற்குழுக் கூட்டம்!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அமைப்பான விமன் இந்தியா மூவ்மென்டின் மாநில செயற்குழு கூட்டம் இன்று(08.09.2018) திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில தலைவி நஜ்மா பேகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவர்களையும் விம் அமைப்பின் மாநில துணைத் தலைவி பாத்திமா கனி வரவேற்புரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாராக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் அவர்களும், மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா அவர்களும் கலந்து கொண்டனர். மேலும், மாநில செயலாளர் வழக்கறிஞர் சபியா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

அன்மையில் உச்சநீதிமன்றம் நாடுமுழுவதும் ஓரினச் சேர்க்கை செல்லும் என்ற சட்டத்தை அமுல்படுத்தியது. இது இந்திய கலாசாரத்திற்கு மாறான ஒன்றாகும், இயற்கைக்கு முரணானதாகும். ஆகவே, இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என விம் அமைப்பு வலியுறுத்துகிறது.

எதிர்வரும் அக்டோபர் 21ம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக திருச்சியில் ஒடுக்கப்பட்டோர்களின் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுவதையோட்டி பல்லாயிரக்கணக்கான பெண் இம்மாநாட்டில் விம் அமைப்பின் சார்பாக கலந்து கொள்ள முன்னேற்பாடுகள் நடைபெற வேண்டும் என நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்ததற்காக போடப்பட்டுள்ள மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்:-

தூத்துக்குடியை சேர்ந்த லூயிஸ் சோபியா என்ற மாணவி கனடாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்த போது, அதே விமானத்தில் பயணித்த பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசையைக் கண்டவுடன் “பாரதிய பாசிச ஜனதா ஒழிக” என்று கோஷம் போட்டதன் காரணமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட்; பா.ஜ.க வாழ்க என கோஷம் இட அவர்களுக்கு உரிமை இருக்கும் பொழுது பாசிச பாஜக ஒழிக என கோஷம் இட சோபியா உட்பட அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

மேலும், சோபியாவின் கோஷம் என்பது ஒவ்வொரு இந்திய குடிமக்களின் மனக்குமுரலை வெளிப்படுத்தியுள்ளது. விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய பா.ஜ.க தலைவர்கள் விமர்சித்தவர்களைத் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பது தவறு எனச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம். சோபியா மீது காவல்துறை இவ்வளவும் வேகமாக நடவடிக்கை எடுத்ததைப் போன்று சோபியாவின் தந்தை கொடுத்த புகாரின் மீது பா.ஜ.க தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோபியா மீது உள்ள வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Related posts

மேலப்பாளையத்தில் விம் தலைமையில் பெண்கள் மாநகராட்சியில் மனு

admin

அத்திக்கடையில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்

admin

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் விம் கண்டன ஆர்ப்பாட்டம்

admin