தேசிய செய்திகள்

மதிமுகவின் முப்பெரும் விழா மாநாட்டில் SDPI தேசிய துணைத்தலைவர் பங்கேற்று வாழ்த்துரை

பெரியார், அண்ணாவின் பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சி திமுகவின் வெள்ளி விழா மற்றும் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் பொது வாழ்வின் பொண்விழாவை அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடும் வண்ணம் ”முப்பெரும் விழா மாநாடு” ஈரோட்டில் இன்று நடைபெற்றது.

இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி உரையாற்றினார்கள்.

மேலும், இம்மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முஹமது ஹசன் அலி, பொதுச் செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம், துனைத் தலைவர்கள் ஃபர்ஹான் அஹமது, குறிஞ்சி பாஷா, மாவட்ட செயலாளர் பவானி முஹம்மது அகீல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹசன் பாபு தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆட்டோ அப்துல் ரகுமான், மாவட்ட ஊடக பொறுப்பாளர் சபீர் அஹமது, கிழக்கு தொகுதி தலைவர் மன்சூர், மேற்கு தொகுதி தலைவர் மஸ்தான் பவானி தொகுதி தலைவர் தர்வேஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டர்.

Related posts

ஜார்க்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட்டுக்கு தடை-எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

admin

பிரச்சினைக்கு போர் தீர்வாகாது – பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

admin

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா, தொடர் களப்பணியில் எஸ்.டி.பி.ஐ

admin