• முகப்பு
  • SDTU தொழிற்சங்கம் செய்திகள்
  • மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவையில் எஸ்.டி.டி.யூ. சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!
SDTU தொழிற்சங்கம் செய்திகள்

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவையில் எஸ்.டி.டி.யூ. சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கு மற்றும் பெறுநிறுவன ஆதரவு போக்கை கண்டித்தும், தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் சார்பாக கோவையில் தொழிலாளர் உரிமை மீட்பு எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செப்.30 அன்று நடைபெற்றது.

எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ரகுபு நிஸ்தார் தலைமையில் கோவை குனியமுத்தூரிலிருந்து தொடங்கிய தொழிலாளர் உரிமை மீட்பு எழுச்சி பேரணியானது பொதுக்கூட்டம் நடைபெறும் கரும்புக்கடை வரை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கரும்புக்கடை பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் முகமது அலி வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.டி.டி.யூ. மாநில துணைத் தலைவர் பூட்டோ சாகுல், மாநில பொருளாளர் பி.கார்மேகம், மாநில செயலாளர் எம்.ஒய்.எஸ்.அப்துல் காதர், கோவை மாவட்ட எஸ்.டி.டி.யூ. செயலாளர் ஷாஜஹான், வடக்கு மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, திருப்பூர் மாவட்ட செயலாளர் முபாரக் அலி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கே.கே.அப்துல் ஜப்பார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது, எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முகமது பாரூக், மாநில பொதுச்செயலாளர் யு.பி.அஜித் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் அப்துல் கரீம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் முஸ்தபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

இறுதியாக திருப்பூர் மாவட்ட எஸ்.டி.டி.யூ. தலைவர் நாகூர் மீரான் நன்றியுரையாற்ற பொதுக்கூட்டம் நிறைவுற்றது. இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

அஞ்சலக ஊழியர்கள் போராட்டத்தில் SDTU

admin

தொழிலாளர் உரிமை மீட்பு மாவட்ட மாநாடு

admin

சென்னையில் நடைபெற்ற தொழிற்சங்கத்தின் தென் மாநில நிர்வாகிகள் கூட்டம்

admin