• முகப்பு
  • மாவட்ட செய்திகள்
  • வேலூரில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது இந்துமுன்னணி தாக்குதல்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சங்பரிவார் அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
மாவட்ட செய்திகள்

வேலூரில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது இந்துமுன்னணி தாக்குதல்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சங்பரிவார் அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! – தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள வேப்பூர் ராசாத்திபுரம் பகுதியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 15 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அதே பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் வழிபாட்டுக்காக ஒரு சர்ச்சையும் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதையடுத்து அப்பகுதியிலிருந்து அவர்களை விரட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. பல தொல்லைகளையும் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு சிலர் மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள மக்களை ஆபாசமாக பேசவே அதனை சிலர் எதிர்த்துள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கு வந்த இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு வீடுகள் மீதும் கற்களை வீசியுள்ளனர். இதில் பாதிரியார், பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக தமிழகத்தை காவி மயமாக்குவோம் என்ற அறைகூவலுடன் சங்பரிவார் அமைப்பின் தலைவர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். அதன் நோக்கம் தமிழகத்தில் திட்டமிட்டு மதக்கலவரத்தை உண்டு பண்ணுவது தான் என்பது சமீபகாலமாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரால் பக்தி என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதலை நடத்தி பொருட்சேதத்தை ஏற்படுத்துவது, அமைதியை சீர்குலைப்பது போன்ற நடவடிக்கையில் சங்கபரிவார் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை, நாகை மாவட்டம் திருபூண்டி போன்ற இடங்களில் திட்டமிட்டு காவல்துறை பாதுகாப்பை மீறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் வேப்பூரில் கிறிஸ்தவ மக்கள் மீது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தின் அமைதியை கெடுக்க திட்டமிட்டு பல்வேறு இடங்களில் வன்முறை மற்றும் கலவரங்களை தூண்டிவிடும் இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினரின் செயல்களை கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல், இரும்புக் கரம் கொண்டு அவர்களை ஒடுக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி உங்களுடன் துணை நிற்கும் என்று தெரிவித்தனர்.

Related posts

அச்சன்புதூரில் SDPI கட்சியின் சார்பில் நலத்திட்ட(வீடு) உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

admin

தென்காசியில் SDPI சார்பில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்!

admin

கோவையில் SDPI சார்பில் நடைபெறும் பாபரி மஸ்ஜித் வரலாற்று கண்காட்சி துவக்கம்!

admin