• முகப்பு
  • தேசிய செய்திகள்
  • முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குடும்பத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! – SDPI கட்சியின் குஜராத் மாநில நிர்வாகிகள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்!
தேசிய செய்திகள்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குடும்பத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! – SDPI கட்சியின் குஜராத் மாநில நிர்வாகிகள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்!

குஜராத் மாநில முன்னால் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட் கடந்த 4 மாதங்களாக சிறையில் இருப்பதை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் சில பயங்கரவாதிகளால் அவர்களது குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.

இதனை அறிந்த SDPI கட்சியின் குஜராத் மாநில தலைவர் அப்துல் ஹமீத் அவர்களது தலைமையிலான குழு ஒன்று ஜனவரி 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சஞ்சீவ் பட் இல்லத்திற்கு நேரில் சென்று, தாக்குதல்கள் குறித்த விபரங்கள் மற்றும் தற்போதைய அதிகாரவர்க்கங்கள் கட்டவிழ்த்து விடும் கொடுமைகளையும் கேட்டறிந்தனர்.

மேலும், இந்த இக்கட்டான சூழலில் சட்ட ரீதியான அனைத்து முன்னெடுப்புகளுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி துணை நிற்கும் என உறுதியளித்தனர்.

இந்த சந்திப்பின் போது மாநில செயலாளர் இக்ரமுதீன் ஷேய்க், ஹனீஃப் ஷேய்க், மற்றும் வழக்கறிஞர் மஹ்மூத் அஹ்மது, இர்ஷாத் ஷேய்க் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

பெங்களூர் மாநகராட்சி சுகாதாரக்குழுவின் தலைவராக மூன்றாவது முறையாக டாக்டர் முஜாஹித் பாஷா தேர்வு!

admin

சுவாமி அக்னிவேஷுடன் SDPI தேசிய துணைத்தலைவர் சந்திப்பு

admin

பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் காப்பகங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள், எஸ்.டி.பி.ஐ. கண்டன தீர்மானம்

admin