• முகப்பு
  • மாவட்ட செய்திகள்
  • பாபரியை மீட்போம்! கோவையில் SDPI நடத்திய கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி!
மாவட்ட செய்திகள்

பாபரியை மீட்போம்! கோவையில் SDPI நடத்திய கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி!

எஸ்.டி.பி.ஐ. கட்சி கோவை மத்திய மாவட்டம் சார்பாக “பாபரியை மீட்போம்! தேசத்தை பாதுகாப்போம்!” எனும் முழக்கத்துடன் பாபரி குறித்த வரலாற்று கண்காட்சி மற்றும் கட்டுரை, ஓவியப் போட்டிகள் ஜனவரி 16ஆம் தேதி புதன்கிழமை அன்று கோட்டைமேடு பொன்விழா ஹாலில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் முஸ்தஃபா தலைமையில் ஜனவரி 17ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
 
கட்சியின், வர்த்தகர் அணி மாநில இணைச்செயலாளர் அப்துல் கரீம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா உசேன், வர்த்தகர் அணி மாவட்ட இணைச்செயலாளர் இப்ராஹிம், SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரவூபு நிஸ்தார், மாவட்ட செயலாளர் முஹம்மது இஷாக், விமன் இந்தியா மூவ்மெண்டின் மாவட்ட துணைத் தலைவர் மைமூனா, மாவட்ட செயலாளர் சாஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல்ரஹ்மான் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்ட பாபரி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

Related posts

பழனி பாதயாத்திரை சென்றவருக்கு விபத்து! முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்த SDPI கட்சியினர்!

admin

கும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்

admin

ஸ்டான்லி மருத்துமனை ஆர்.எம்.ஓ.,வை மரியாதை நிமித்தமாக சந்தித்த SDPI கட்சியினர்!

admin