• முகப்பு
  • மாநில செய்திகள்
  • மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் துணைநிலை ஆளுநரை கண்டித்து புதுவை முதல்வர் தர்ணா! – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் துணைநிலை ஆளுநரை கண்டித்து புதுவை முதல்வர் தர்ணா! – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தல்
துதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புதுச்சேரியில் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல், மாநில அரசின் நிர்வாகத்தை முடக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து, ஆளுநர் மாளிகை முன்பு புதுச்சேரி முதல்வரும், அமைச்சர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி முழுமனதாக ஆதரிக்கிறது.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல், பாஜக ஆளாத மாநிலங்களின் உரிமையில் தலையிட்டும், மாநிலங்களில் ஆளுநர் மூலமாக மறைமுக ஆட்சி நடத்தவும் முயன்று வருவது தொடர்பான குற்றச்சாட்டுகள் புறக்கணிக்கக் கூடியவையல்ல. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உள்ளிட்ட ஆளுநர்களின் நடவடிக்கைகள் மக்களாட்சியின் மரபுகளுக்கு எதிரானவை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
புதுவை, டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களில் தங்களால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர்கள் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை மத்திய பாஜக அரசு முடக்கிவருகின்றது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு இந்த ஏதேச்சதிகார போக்கை கண்டித்து தர்ணா, அறிக்கை, போராட்டம், வழக்கு என்று எல்லா வழிகைளையும் கையாண்டு வருகிறது. இப்போது அதுபோன்ற ஒருநிலையை புதுச்சேரி மாநிலம் சந்தித்து வருகின்றது. ஆளுநருக்கெதிராக முதல்வர் நாராயணசாமி வீதியில் இறங்கிப் போராடி வருவது கவலையளிக்கும் விசயமாகும்.
புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமி அரசின் மக்கள் நலத்திட்டங்களை, தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, துணைநிலை ஆளுநர் முடக்கிவைப்பது என்பது கண்டிக்கத்தக்கது.
அமைச்சரவை கூடி எடுக்கும் முடிவைக்கூட செயல்படுத்த முடியாத சூழல் புதுவையில் உள்ளது. ஆளுநரின் தலையீட்டால் பல திட்டங்கள் முடங்கியுள்ளன. இலவச அரிசி திட்டம், தொழிலாளர்களுக்கு நிவராணம் வழங்கும் திட்டம், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட 39 மக்கள் நலத்திட்டங்களை ஆளுநர் கிரண்பேடி செயல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டுள்ளதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்த முடிவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆளுநரின் இந்த ஏதேச்சதிகார போக்கு கண்டிக்கத்தக்கது.
ஆகவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் வகையில் செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற்று, வேறு ஒருவரை துணைநிலை ஆளுநராக நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் எதிர்ப்பு

admin

காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும்! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

admin

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு SDPI கட்சியின் மாநில தலைவர் வாழ்த்து

admin