தேசிய செய்திகள் பத்திரிக்கை அறிக்கை

பிரச்சினைக்கு போர் தீர்வாகாது – பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படையை (சி.ஆர்.பி.எஃப்) சேர்ந்த வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் அது பயங்கரமான செலவீனமாகவும், அழிவுத்தன்மை உள்ளதாகவும் அமையும் என்பதால், இரு நாடுகளும் நெருக்கடியை போர் அளவுக்கு விரிவாவதை தடுக்க வேண்டும். மேலும், இப்படி ஒரு நிலைமை, பொருளாதார பின்தங்கல் மற்றும் ஏழ்மையிலிருந்து ஏழை மக்கள் மீண்டு வரக்கூடிய முயற்சியை சீர்குலைக்கும். அதோடு, அது இந்திய துணைக் கண்டத்தில் தீவிரவாத வலதுசாரி சக்திகளை ஊக்கப்படுத்திவிடும்.
 
இத்தகைய இக்கட்டான சூழலில், எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது, சிறிதளவு வாக்குகளை கவர்ந்திழுக்கும் வகையில், சில உணர்ச்சியான முழக்கங்களை மக்கள் முன் வைத்து, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் மத்திய அரசின் திட்டத்தை மக்கள் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும். தேசத்தில் பிளவை ஏற்படுத்த முயலும் சக்திகளை முறியடிக்க மக்கள் கைக்கோர்க்க வேண்டும்.
 
கடந்த எழுபதாண்டுகளில், காஷ்மீர் பிரச்சினையை ராணுவ பலத்தை பயன்படுத்தி தீர்க்க முடியாது என்பது நிரூபணமாகிவிட்டது. காரணம் இப்பிரச்சினை அடிப்படையில் அரசியல் ரீதியானது.
 
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் நிலைமை மோசமாகிவிட, பிரச்சினையின் உண்மைத் தன்மையை நம்மால் வெளிக்கொண்டுவர முடியாமல் மறுக்கப்பட்டோம். வன்முறை சம்பவங்கள் நிகழ்வது அம்மாநிலத்தில் புதிய வழக்கமாகி விட்டதை நாம் பார்த்து வருகிறோம். பா.ஜ.க-வின் ஆட்சியில் பிரச்சினையை தடுக்கும் வியூகம் தோல்வி அடைந்து விட்டது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்பட்டிருக்கிறது.
 
காஷ்மீர் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வை காணவேண்டும்.
 
மேற்கண்டவாறு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சுவாமி அக்னிவேஷுடன் SDPI தேசிய துணைத்தலைவர் சந்திப்பு

admin

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம்

admin

சமூக நீதிக்கெதிரான இடஒதுக்கீடு சட்டத்திருத்தை கண்டித்து ஜனவரி 25, சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம்!

admin