• முகப்பு
  • மாவட்ட செய்திகள்
  • சம்பன்குளத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அனைத்து சமூக மக்களுக்கு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி!
மாவட்ட செய்திகள்

சம்பன்குளத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அனைத்து சமூக மக்களுக்கு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சம்பன்குளம் கிளை சார்பாக சமூக ஒற்றுமை பொதுக்கூட்டம், அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சிக்கு முஹம்மது அசன் கனி தலைமை தாங்கினார். செய்யது, பச்சை சமாள் கண்ணன், அழகர்புரம் ஊர் நாட்டாமை சக்திவேல், நிலமேகபுரம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் காசிராஜன், ரஹ்மத் நகர் ஜமாத் தலைவர் அப்துல் கனி, எம்.ஆர்.அபுபர்க்க ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.பி.எம்.ரசூல் மைதீன் வரவேற்று பேசினார்.
 
நெல்லை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி துவக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்து உரையாற்றினார்.
 
விமன் இந்தியா மூவ்மெண்டின்(விம்) மாநில தலைவர் நஜ்மா பேகம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது அலி, நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். நெல்லை கிழக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி மூலம் தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு ரத்தம் கொடுத்து வரும் ரத்த கொடையாளர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.
 
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.ஏ. கனி, மாவட்ட பொதுச்செயலாளர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்ட செயலாளர்கள் முல்லை மஜீத், பேட்டை முஸ்தபா, மாவட்ட பொருளாளர் களந்தை மீராஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முபாரக் அலி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஆரிப் பாஷா, அம்பை தொகுதி தலைவர் சுலைமான், செயலாளர் அஜிப், தொகுதி தலைவர் காஜா, செயலாளர் அஜீஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் என்.ஆர்.சுலைமான் நன்றி கூறினார்.

Related posts

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசினாலே வழக்கு கைது! – காவல்துறையின் நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin

தென்காசியில் SDPI சார்பில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்!

admin

ரத்ததான சேவைக்கான விருது

admin