மாவட்ட செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்றும் நிகழ்ச்சி!

மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றிவைத்து உரையாற்றினார்.
 
அதனை தொடர்ந்து நடைபெற்ற அனைத்து செயல்வீரர்கள் கூட்டத்தில் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஃபீக் அஹமது, ஏ.கே.கரீம் ஆகியோர் கலந்து கொண்டு செயல்வீரர்களிடையே உரையாற்றினர்.
 
இந்நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் தலைமையேற்றார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி, அஹமது, பாப்புலர் ஃப்ரண்ட் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர்.

Related posts

புதுமடத்தில் மின்வெட்டைக் கண்டித்து  SDPI அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

admin

வாளையார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை SDPI மாநில தலைவர் சந்தித்து ஆறுதல்

admin

திருமங்கலம்-கொல்லம் நான்குவழிச் சாலைக்கு எதிராக வாசுதேவநல்லூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு SDPI அழைப்பு!

admin