• முகப்பு
  • தேசிய செய்திகள்
  • “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்!  நமது பாதுகாப்புக்காக போராடுவோம்!  | விம் அமைப்பின் தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி!
தேசிய செய்திகள் மகளிர் அணி செய்திகள்

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்!  நமது பாதுகாப்புக்காக போராடுவோம்!  | விம் அமைப்பின் தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி!

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்! 
நமது பாதுகாப்புக்காக போராடுவோம்!  – 
சென்னையில் நடைபெற்ற தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி! 
ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
உலக மகளிர் தினமான இன்று (மார்ச் 8-ஆம் தேதி) விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்! நமது பாதுகாப்புக்காக போராடுவோம்! என்ற பிரச்சார நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நமது இராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
‘பெண்களுக்கான உரிமைகள்! அனைவருக்குமான உரிமைகள்!’, ‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம்! நமது பாதுகாப்புக்காக போராடுவோம்!’ என்ற முழக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் விமன் இந்தியா மூவ்மெண்ட் (விம்) அமைப்பின் சார்பாக கடந்த செப்டம்பர் 23ந் தேதி துவங்கிய பிரச்சாரம் ஆறு மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தின் நிறைவு நிகழ்ச்சி இன்று(மார்ச் 08) சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் விம் அமைப்பின் தேசிய தலைவர் மெஹ்ருன்னிஷா கான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர்கள் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, பேராசிரியர் நாஸ்னி பேகம், ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்ட வாரிய தேசிய செயற்குழு உறுப்பினர் மம்தூஹா மஜீத்(டெல்லி), எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், விமன் இந்தியா மூவெம்ண்டின் தேசிய பொதுச்செயலாளர் யாஸ்மின் இஸ்லாம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலாளர் யாஸ்மின் ஃபரூக்கி, விமன் இந்தியா மூவ்மெண்டின் தேசிய துணைத்தலைவர் கும்கும் பெண், விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில தலைவர் நஜ்மா பேகம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் மஹ்பூப் செரீஃப், விமன் இந்தியா மூவ்மெண்டின் கர்நாடக மாநில தலைவர் சாஹிதா தஸ்னீம், கேரள மாநில தலைவர் ரைஹானாத், ராஜஸ்தான் மாநில தலைவர் ஃபரீதா செய்யது, நேஷனல் விமன் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஆசியா மர்யம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் விம் அமைப்பின் தேசிய செயலாளர் வழக்கறிஞர் சாஹிரா பானு, மாநில பொதுச்செயலாளர் நசீமா பானு, துணைத்தலைவர் ஃபாத்திமா கனி உட்பட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர, உத்திர பிரதேச மாநில தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.

Related posts

”அயோத்தியா அரசியல் சதுரங்கத்தில் ஒரு காய்” புத்தகம் வெளியீடு

admin

ஜார்க்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட்டுக்கு தடை-எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

admin

மதிமுகவின் முப்பெரும் விழா மாநாட்டில் SDPI தேசிய துணைத்தலைவர் பங்கேற்று வாழ்த்துரை

admin