தேசிய செய்திகள்

கும்பல் கொலைகளுக்கு எதிராக டெல்லியில் தர்ணா போராட்டம் | SDPI கட்சி பங்கேற்பு

தேசத்தில் அண்மைக் காலங்களாக முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் மீது எந்த வித காரணங்களும் இன்றி சங்பரிவார் கும்பல்கள் தாக்குதலைத் தொடுத்து அடித்துக் கொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக டெல்லியில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தொடரும் கும்பல் படுகொலைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு நிறுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரியப் பாதுகாப்பும், இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும், இக்குற்றத்தில் ஈடுபட்ட கும்பல்களுக்கு உரியத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த தர்ணாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் தேசிய செயலாளர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி கலந்து கொண்டு கும்பல் கொலைகளுக்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்தார்.

Related posts

ஃபாலஸ்தீனியர்களுக்காக ஜெருசலத்தை மீட்டெடுப்போம்; எஸ்.டி.பி.ஐ

admin

‘Kashmir; Restore democracy’

admin

பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் காப்பகங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள், எஸ்.டி.பி.ஐ. கண்டன தீர்மானம்

admin