• முகப்பு
  • மாவட்ட செய்திகள்
  • ஆலங்குடியில் இஸ்லாமியர்கள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்! – SDPI மாநில பொதுச்செயலாளர் சந்திப்பு
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆலங்குடியில் இஸ்லாமியர்கள் மீது இந்து முன்னணி குண்டர்கள் தாக்குதல்! – SDPI மாநில பொதுச்செயலாளர் சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முருகானந்தம் மற்றும் கணேசன் என்பவர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்தை பயன்படுத்தி, அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக இருக்கும் ஆலங்குடியில், மத பதற்றத்தையும், அச்சுறுத்தலையும் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த வன்முறைக் கும்பல், கடந்த 14ஆம் தேதி பள்ளிவாசல் மீது கற்களை வீசியும், இஸ்லாமியர்களின் கடைகளை அடித்து நொறுக்கியும், அங்கே நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை தாக்கியும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக காவல்துறையிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், 18.07.2019 அன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களையும், தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும், ஒற்றுமையாக இருக்கும் இரு சமூகத்தினரிடமும், சில மதவெறிபிடித்தவர்கள் செய்யும் செயல்களால் பதற்றம் உருவாகி உள்ளது. அமைதியாக இருக்கும் தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்களால்தான் பதற்றங்கள் உருவாகி உள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களை காவல்துறை தனது இரும்புக்கரம் கொண்டு அடக்குவதோடு, இச்செயலில் ஈடுபட்ட குண்டர்களை கைது செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாததுரை, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சலாவுத்தீன், பொதுச்செயலாளர் ஜியாவுதீன், துணைத்தலைவர் ஆலங்குடி முகமது மைதீன், ஆலங்குடி நகர தலைவர் அப்துல் ரஜாக், கறம்பக்குடி சித்திக் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

திருக்காரவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு

admin

கும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்

admin

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் – ஏற்புடையதல்ல: எஸ்.டி.பி.ஐ.

admin