மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாளையார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை SDPI மாநில தலைவர் சந்தித்து ஆறுதல்

கோவை வாளையார் விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் அவருடைய குடும்பத்தார்களையும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வாளையாரை அடுத்த கேரளாவின் வட்டப்பாரா என்ற இடத்தில் கடந்த ஜூன் 29ந் தேதி அன்று ஆம்னி வேன் விதிகளுக்குப் புறம்பாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயங்களுடன் பாலக்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2 குழந்தைகள் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஜூலை 19-ந் தேதி அன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அக்குழந்தைகளையும், உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இச்சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

சென்னையில் நடைபெற்ற “நாடாளுமன்ற தேர்தலும், நமது பொறுப்பும் ” கலந்துரையாடல் நிகழ்ச்சி! – SDPI தேசிய துணைத்தலைவர் பங்கேற்பு!

admin

ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்-எஸ்.டி.பி.ஐ பங்கேற்பு

admin

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் வாழ்த்து

admin