மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொரவச்சேரியில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் மீது தாக்குதல் – நேரில் சந்தித்து SDPI ஆறுதல்!

நாகை மாவட்டம் பொரவச்சேரியில் மாட்டுக்கறி சாப்பிட்ட காரணத்தால் தாக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஹம்மது பைசானை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாகை மாவட்டம் பொரவச்சேரியில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு தனது முகநூலில் பதிவு செய்த முஹம்மது பைசானை அதே பகுதியை சேர்ந்த கும்பல் கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் அவர் தாக்கப்பட்ட நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் தலைமையில், நாகை தெற்கு மாவட்ட தலைவர் அக்பர் அலி, நாகை நகர தலைவர் பகுருதீன், நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் ரியாஸ் மற்றும் கட்சியின் நாகை நகர நிர்வாகிகள் மருத்துவமனையில் உள்ள முஹம்மது பைசானை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Related posts

தமிழக அரசின் பேருந்து கட்டண குறைப்பு அறிவிப்பு! கண்துடைப்பு நடவடிக்கை

admin

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு SDPI கட்சியின் மாநில தலைவர் வாழ்த்து

admin

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாட்டுக் கலை விழாவில் SDPI பங்கேற்பு!

admin