• முகப்பு
  • பத்திரிக்கை அறிக்கை
  • கும்பல் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியினர் கைது – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

கும்பல் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியினர் கைது – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நாகை மாவட்டம் பொராவாச்சேரியில் மட்டிறைச்சி உண்ணும் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதற்காக முஸ்லிம் இளைஞர் முகமது பைஸான் என்பவர் கடந்த ஜூலை 12 அன்று இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பை சேர்ந்த வன்முறை கும்பலால், ஆயுதங்கள் மூலம் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வடமாநிலங்களில் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் நிகழ்த்தி வரும் கும்பல் தாக்குதலை போன்று தமிழகத்திலும் நடைபெற்ற இந்த சம்பவத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டித்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி தலைமையில் நேற்று (ஜூலை 18) தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்த காவல்துறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அருண் சோரி உள்ளிட்ட 7 பேர்களை கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்துள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பசு பாதுகாப்பு என்ற பெயரால் அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் வட மாநிலங்களில் நிகழ்த்தப்படும் வன்முறையை போன்று குமபல் தாக்குதலை நிகழ்த்தியும், மதவாத வன்முறையை தூண்டியும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிடும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினருக்கு எல்லாவகையான சுதந்திரத்தையும் அளிக்கும் காவல்துறை, தமிழகத்தின் அமைதியை பாதுகாக்க வேண்டும், அதற்கு எதிராக செயல்படும் மதவாத சக்திகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குரல் கொடுப்பதை ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது. ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன் அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை உள்துறைக்கு அனுப்பிய தமிழகஆளுநர்!

admin

திராவிடக் கழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் வரைவுத் தீர்மானத்திற்கு எஸ்.டி.பி.ஐ முழு ஆதரவு!

admin

பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு! அச்சுறுத்தி மெளனிகளாக்கும் முயற்சி – எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் குற்றச்சாட்டு

admin