மாவட்ட செய்திகள்

புதுமடத்தில் மின்வெட்டைக் கண்டித்து  SDPI அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

புதுமடத்தில் தொடர்ச்சியான மின்வெட்டைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில்  அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் தொடர்ச்சியாகப் பல மாதங்களாக மின்வெட்டு இருந்து வருகிறது. இதனை சரி செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பல்வேறு முனைகளில் மனுக்கள் மூலமாகவும், கண்டன போராட்டங்கள் வாயிலாகவும் துறை சார்ந்த நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தி வந்த நிலையிலும் தொடர்ச்சியாக இது போன்ற மின்வெட்டுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், இதனைக் கண்டித்து 18.07.2019 அன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம், முன்னாள் மாவட்ட செயலாளர் அஜ்மல் செரீஃப் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் போராட்ட இடத்திற்கு வருகை தந்து போராட்டத்தின் கோரிக்கையை ஏற்றுத் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதியளித்ததோடு, போராட்டத்தைக் கைவிடக்கோரினார். அவரது வாக்குறுதியை ஏற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. பிறகு, காவல்துறை கண்காணிப்பாளர், மின்துறை அதிகாரி மற்றும் கிராம அதிகாரிகள் வருகை தந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோரிக்கைக்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதியளித்தனர்.

Related posts

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாட்டுக் கலை விழாவில் SDPI பங்கேற்பு!

admin

திருத்தணியில் SDPI கட்சியின் சார்பில் “பாபரி மஸ்ஜித்” வரலாற்று கண்காட்சியகம் திறப்பு!

admin

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பில் தாமிரபரணி பாதுகாப்பு கூட்டம் எஸ்டிபிஐ பங்கேற்பு

admin