மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் கும்பல் கொலைகளுக்கு எதிராக SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜார்கண்டில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி இஸ்லாமிய இளைஞர் தப்ரேஸ் அன்சாரியை அடித்துக்கொலை செய்த பயங்கரவாத கும்பலை கண்டித்தும், மாட்டுக்கறி மற்றும் ஜெய்ஸ்ரீராம் பெயரால் முஸ்லிம்களை அடித்துக் கொலை செய்யும் சங்பரிவார இந்துத்துவ கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மாவட்ட தலைவர் அப்துல் கரீம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், த.வா.க. தொழிற்சங்க மாநில பொருளாளர் இரா.பன்னீர்செல்வம், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாவட்ட தலைவர் குலாம் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேரன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், அமமுகவின் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் கலந்து கொண்டு கும்பல் கொலைகளுக்கு எதிராக கண்டன உரையாற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நீதிக்கான கண்டன முழக்கமிட்டனர்.

Related posts

செங்கோட்டை வன்முறை மற்றும் அப்பாவி இளைஞர்கள் கைதை கண்டித்து கடையநல்லூரில் SDPI சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

admin

நினைவேந்தல் கூட்டம்

admin

திருப்பூர் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அமைதி பிரார்த்தனை!

admin