மாவட்ட செய்திகள்

இராமநாதபுரத்தில் கும்பல் கொலைகளுக்கு எதிராக SDPI கட்சிகண்டன ஆர்ப்பாட்டம்!

ஜார்கண்டில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி இஸ்லாமிய இளைஞர் தப்ரேஸ் அன்சாரியை அடித்துக்கொலை செய்த பயங்கரவாத கும்பலை கண்டித்தும், மாட்டுக்கறி மற்றும் ஜெய்ஸ்ரீராம் பெயரால் முஸ்லிம்களை அடித்துக் கொலை செய்யும் சங்பரிவார இந்துத்துவ கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் சந்தை திடல் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

Related posts

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாட்டுக் கலை விழாவில் SDPI பங்கேற்பு!

admin

பாபரியை மீட்போம்! கோவையில் SDPI நடத்திய கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி!

admin

நீடூர் அரபிக் கல்லூரி சார்பாக மாநில தலைவருக்கு வரவேற்பு

admin