• முகப்பு
  • பத்திரிக்கை அறிக்கை
  • தலித், முஸ்லிம்கள் குறித்த கேந்திரிய வித்தியாலயாவின் கேள்வித்தாள்! – மாணவர்களிடம் நஞ்சை விதைக்கும் செயலுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

தலித், முஸ்லிம்கள் குறித்த கேந்திரிய வித்தியாலயாவின் கேள்வித்தாள்! – மாணவர்களிடம் நஞ்சை விதைக்கும் செயலுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில மாநில துணைத்தலைவர் அம்ஜத் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்தியாலயா பள்ளியின் கேள்வித்தாள் ஒன்றில், தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில், ஆறாம் வகுப்பு வினாத்தாள் ஒன்றில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக சமூக வலைத் தளங்களில் வினாத்தாள் படங்களுடன் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது கடும் கண்டனத்திற்குரியது.

அம்ஜத் பாஷா (மாநில துணைத்தலைவர்,எஸ்.டி.பி.ஐ.கட்சி)

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அந்த வினாத்தாளில் தலித்துகள் என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு விடைகளாக அந்நியர்கள், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், உயர் வகுப்பினர் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் எந்த சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்ற கேள்விக்குப் பணக்காரர், ஏழை, தலித், பொருளாதாரம் என்று நான்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுவாக முஸ்லிம்களின் பண்பு என்ன? என்ற ஒரு கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு முஸ்லீம்கள் பெண்களைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள், அவர்கள் சைவ உணவு பழக்கத்தினர், அவர்கள் நோன்பு இருக்கும் காலங்களில் எப்போதும் தூங்குவதில்லை, இவை அனைத்தும் என்று மூன்று விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே கேள்வித்தாளில் முஸ்லிம் பெண்கள் ஏன் பள்ளிக்குச் செல்வதில்லை? என்ற கேள்வியும் அதற்குப் பதிலாக இழிவான சோம்பேறி, பேசாத சோம்பேறி, தாராளமாக இருக்கும் கஞ்சத்தனம், அவர்கள் ஏழைகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற கேள்விகள் குழந்தைகளின் மாணவ பருவத்திலேயே சாதி மற்றும் மத ரீதியான எண்ணத்தை ஊக்கப்படுத்தவே செய்யும். இப்படிப்பட்டவர்கள் தான் தலித்கள், அந்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தான் டாக்டர் அம்பேத்கர். இப்படிப்பட்டவர்கள் தான் முஸ்லிம்கள், அந்த சமூகத்தின் பெண்கள் இப்படிப்பட்டவர்கள் என்ற நஞ்சை விதைக்கும் வகையில் உள்ளது. இது படிக்கும் மாணவர்களிடையே சிந்தனை ரீதியில் ஏற்றத்தாழ்வை அல்லவா உருவாக்கும்.

இந்த அநாகரிகமான வினாத்தாள் தயாரித்த குழுவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்த கேள்விகள் அமைக்கப்பட்டிருக்குமானால் அத்தகைய நஞ்சை விதைக்கும் பாடங்கள் குறித்து ஆய்வு செய்து அதனை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

பொதுவாக மத்திய அரசு தொடர்புடைய கல்வி நிலையங்களில் தான் இத்தகைய பாடத்திட்டங்களும், கேள்வித்தாள்களும் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. மாணவர்களுக்குக் கல்வியைப் போதிக்கும் கல்வி நிலையங்களில் இத்தகைய சாதி, மத அடிப்படையிலான சர்ச்சைகளை ஏற்படுத்தும் பாடத்திட்டங்களை உருவாக்குபவர்கள், கேள்வித்தாளை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு அவர்கள் கல்வித்துறையிலிருந்து களையப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Related posts

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் வாழ்த்து

admin

கும்பல் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியினர் கைது – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin