மாவட்ட செய்திகள்

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்!

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக 2 டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

இந்நிலையில், கீழக்கரை போலீஸ் சூப்பிரண்ட் முருகேசன், மற்றும் டாஸ்மாக் தாசில்தார் கிரோன்மணி, கீழக்கரை தாசில்தார் சிக்கந்தர் பபிதா ஆகியோர் தலைமையில் எஸ்.டி.பிஐ. கட்சியின் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பூட்டு போடும் போராட்டம் நிறுத்தப்பட்டது.

கீழக்கரை தாசிதார் பபிதா, ஏற்கனவே இக்கடைகளை மூடுவது குறித்து பரிசீலனையில் இருப்பதாகவும் ஒரு மாதத்தில் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதனை உறுதிப்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வலியுறுத்தியதால் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் கூறியதாவது; விரைவில்

டாஸ்மாக் அகற்றுவதை பற்றி மறு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் அடுத்த போராட்டம் இதைவிட வீரியமாக நடைபெறும் என்று மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் கூறினார். இதில் கீழக்கரை நகர தலைவர் ஹமீது பைசல் மற்றும் அஷ்ரப், ஹசன் அலி, ஜமீல், மாவட்ட ஊடக தொடர்பாளர் அப்துல் வஹாப் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

ஓசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் பங்கேற்பு

admin

திருவண்ணாமலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இணைந்த இளைஞர்கள்

admin

செங்கோட்டை வன்முறை மற்றும் அப்பாவி இளைஞர்கள் கைதை கண்டித்து கடையநல்லூரில் SDPI சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

admin