SDTU தொழிற்சங்கம் செய்திகள்

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.டி.யூ சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிற்சங்க பிரிவான சோசியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் (எஸ்.டி.டி.யூ) சார்பாக நெல்லையில் மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்திட வலியுறுத்தியும், போக்குவரத்து வாகன வரிகளை உயர்த்தி மோட்டார் தொழிலை நசுக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மீரான் மைதீன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளாராக எஸ்.டி.டி.யூ. மாநில தலைவர் முஹம்மது பாரூக், எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

எஸ்டிடியூ மாநில செயலாளர் முகமது ரபிக், மாவட்ட துணை தலைவர் சர்க்கரை மீரான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, ஹாருன் சரீப், லியாகத் அலி, உறையூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டனங்களை தெரிவித்தனர்.

Related posts

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவையில் எஸ்.டி.டி.யூ. சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!

admin

சென்னையில் நடைபெற்ற தொழிற்சங்கத்தின் தென் மாநில நிர்வாகிகள் கூட்டம்

admin

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து வேலூரில் எஸ்.டி.டி.யூ ஆர்ப்பாட்டம்

admin