மாவட்ட செய்திகள்

அமித் ஷாவின் இந்தி மொழி திணிப்பு கருத்தை கண்டித்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி மொழி தான் நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தை, ரவுண்டானா அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தலைவர் கனி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அஹமது நவவி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கல் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

 

Related posts

வந்தவாசியில் SDPI கண்டன ஆர்ப்பாட்டம்

admin

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து களியக்காவிளையில் போராட்டம் எஸ்டிபிஐ பங்கேற்பு

admin

ஸ்டான்லி மருத்துமனை ஆர்.எம்.ஓ.,வை மரியாதை நிமித்தமாக சந்தித்த SDPI கட்சியினர்!

admin