மாவட்ட செய்திகள்

அமித் ஷாவின் இந்தி மொழி திணிப்பு கருத்தை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி மொழி தான் நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, மதுரை மாவட்டம் தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பேச்சாளர் செய்யது இப்ராஹிம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட செயலாளர் காஜா மைதீன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொறுப்பாளர் ஆரோக்கிய மேரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

Related posts

பாபரியை மீட்போம்! இந்தியாவை மீட்போம்!! SDPI சார்பில் புளியங்குடியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்! 

admin

தென்காசியில் SDPI சார்பில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்!

admin

நினைவேந்தல் கூட்டம்

admin