பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி. சி.இ.ஜி, உள்ளிட்ட வளாகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையை பாடமாக அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பல்வேறு மதங்களை பின்பற்றக்கூடிய நாட்டில், மாணவர்களின் கல்வியில் ஒரு மதத்தின் நூலாக அடையாளப்படுத்தப்படுகிற பகவத்கீதையை பாடமாகச் சேர்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது. ஒருமைப்பாட்டை போதிக்க வேண்டிய கல்வி வளாகத்தில் ஒரு மதம் சார்ந்த கொள்கைகளை திணிப்பது ஏற்புடையதல்ல.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும அறிவுறுத்தலின்படி பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்துத்துவா கொள்கையை மாணவர்களுக்கு திணிக்கும் போக்கை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகின்றது.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்தது முதல் கல்வியை காவி மயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. புதிய கல்விக் கொள்கை மூலமாக இந்துத்துவா கொள்கையை மாணவர்களுக்குத் திணிக்கின்ற கல்விக்கொள்கையை கொண்டுவர முனைகின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக  பாடத்திட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது.

மாநில உயர்கல்வி துறையின் கீழ் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இத்தகைய அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். மேலும், கல்வியை காவி மயமாக்கும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு ஒருபோதும் தமிழக அரசு துணை போகக்கூடாது எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளருக்கு SDPI கட்சியிடம் ஆதரவு கோரி வசந்தகுமார் எம்.பி.,வருகை

admin

டாக்டர் கலைஞரின் நினைவுகள் நிகழ்ச்சியில் SDPI பங்கேற்பு!

admin