பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

இந்து முன்னணியினரின் அவதூறுக்கு எதிராக பதிவிட்ட எஸ்.டி.பி.ஐ. மாவட்ட நிர்வாகி கைது! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இந்து முன்னணியினரின் அவதூறுக்கு எதிராக பதிவிட்ட எஸ்.டி.பி.ஐ. மாவட்ட நிர்வாகி கைது! – காவல்துறையின் பாரபட்ச நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
***********************************

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொருளாளர் வி.எம்.எஸ்.அபுதாஹிர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருப்பூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஹாரிஸ் பாபு மீது இந்து முன்னணியினரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அவரை ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்துள்ள காவல்துறையின் பாரபட்ச நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

திருப்பூர் மாவட்டத்தில் இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக விசமக்கருத்துகளையும், அவதூறுகளையும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக தொடர்ச்சியாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்திலான நடவடிக்கைகளை இந்து முன்னணி அமைப்பினர் செய்து வந்தனர்.

இந்நிலையில், கோவை சசிகுமார் நினைவு நாள் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான விசமக்கருத்துக்களை இந்து முன்னணி அமைப்பினர் சமூக வலைதளங்களில் பரப்பிய நிலையில், அவர்களின் பொய்யான விசமக் கருத்துக்கு எதிராக கருத்து பதிவிட்ட எஸ்.டி.பி.ஐ. மாவட்ட பொதுச்செயலாளர் ஹாரிஸ் பாபு மீது இந்து முன்னணி புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, இன்று அதிகாலை கைது செய்து ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.

தொடர்ச்சியாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக விசமக்கருத்துக்களை பரப்பி வரும் இந்து முன்னணியினர் மீது புகார் அளித்தும் அதனை கண்டுகொள்ளாத காவல்துறை, இந்து முன்னணியினரின் புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டது காவல்துறையின் பாரபட்ச போக்கை காட்டுகிறது.

இந்து முன்னணியினரின் அவதூறான விசமக்கருத்துக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்ட காரணத்துக்காக ஹாரிஸ் பாபுவை கைது செய்த காவல்துறை, இந்து முன்னணியினர் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது, ஆகவே, ஹாரிஸ் பாபுவை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

சுவாமி அக்னிவேஷ்வுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. பங்கேற்பு!

admin

இலங்கை கலவரம் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

admin

சிறையில் தோழர் திருமுருகன் காந்திக்கு தொடரும் மனித உரிமை மீறல்!

admin