வழக்கறிஞர் அணி செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணி நடத்திய சட்ட கருத்தரங்கம்

திருத்தப்பட்ட கருப்பு சட்டங்களும், மக்களை அகதிகளாக்கும் தேசிய குடியுரிமை பதிவேடும்! – எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணி நடத்திய சட்ட கருத்தரங்கம்

எஸ்.டி.பி.ஐ. கட்சி வழக்கறிஞர் அணி சார்பில் “திருத்தப்பட்ட கருப்புச் சட்டங்களும், மக்களை அகதிகளாக்கும் தேசிய குடியுரிமை பதிவேடும்” என்ற தலைப்பிலான சட்டக்கருத்தரங்கம் செப்டம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணியளவில் மதுரை யானைக்கல் ஹோட்டல் பிரசிடெண்டில் நடைபெற்றது.

வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் வழக்கறிஞர் எ.ஜஹாங்கீர் பாதுஷா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் “மக்களை அகதிகளாக்கும் தேசிய குடியுரிமை பதிவேடு” என்ற தலைப்பில் வழக்கறிஞர் அணியின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் எஸ்.ஏ.எஸ்.அலாவுதீன் அவர்களும், “திருத்தப்பட்ட கருப்புச் சட்டங்கள் யு.ஏ.பி.ஏ, என்.ஐ.ஏ” என்ற தலைப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், என்.சி.எச்.ஆர்.ஓ மாநில தலைவருமான வழக்கறிஞர் பா.மோகன் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும் இந்த கருத்தரங்கில் வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் எ.சையது அப்துல் காதர், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இறுதியாக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் முகமது யூசுப் நன்றியுரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related posts

வழக்கறிஞர் அணியின் மாநில செயற்குழு கூட்டம்

admin

தூத்துக்குடியில் நடைபெற்ற சட்டவிழிப்புணர்வு முகாம்

admin

திருவள்ளூர் மாவட்ட ஜக்கிய ஜமாத் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம். வழக்கறிஞர் அணி பங்கேற்பு

admin