• முகப்பு
  • தேசிய செய்திகள்
  • பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு! அச்சுறுத்தி மெளனிகளாக்கும் முயற்சி – எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள் பத்திரிக்கை அறிக்கை

பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு! அச்சுறுத்தி மெளனிகளாக்கும் முயற்சி – எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் குற்றச்சாட்டு

பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு!
அச்சுறுத்தி மெளனிகளாக்கும் முயற்சி – எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் குற்றச்சாட்டு

இந்தியாவைச் சேர்ந்த 49 திரைப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர். அதில், மதத்தின் பெயரால் நடைபெறும் கும்பல் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசை விமர்சிப்பவர்கள் தேச விரோதியாகவும், நகர்புற நக்சலாகவும் முத்திரை குத்தப்படுகின்றனர். ஆளும் அரசை விமர்சிப்பது தேசவிரோதமாகாது என தெரிவித்திருந்தனர். மேலும், கும்பல் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தும், தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தனர்.

கடிதத்தில் சமூக ஆர்வலர்கள் ராமச்சந்திர குஹா, கொங்கனா சென் சர்மா, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென் உட்பட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்நிலையில் அக்கறை உள்ள குடிமகனாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காரணங்களுக்காக, பிரபலங்கள் 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததன் மூலம் எதிர்குரல்களை அச்சுறுத்தி மெளனிகளாக்க அரசு முயற்சிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் சங்க்பரிவாரம் நடத்தும் கும்பல் வன்முறைகளை சுட்டிக் காட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்த நடவடிக்கை என்பது, அச்சுறுத்தி மெளனிகளாக்கும் முயற்சியாகும். இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தும்.

ஜெய் ஸ்ரீராம் கூறுமாறு கட்டாயப்படுத்தியும், பசுவின் பெயராலும் சங்க்பரிவாரம் பொது இடங்களில் அப்பாவிகளை அடித்து கொல்லும்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாதவர்கள், வன்முறையை கண்டிக்கும் போது அதற்கு எதிராக தேச துரோக குற்றம் சுமத்துவது ஜனநாயகத்தை நிராகரிக்கும் செயலாகும்.

வகுப்புவாத வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய கலாச்சார ஆர்வலர்களுக்கு முழு ஆதரவு அளிப்போம். அவர்களின் போராட்டங்களில் ஓருங்கிணைவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இணைந்த தஸ்லீம் அஹமது ரஹ்மானி

admin

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம்

admin

‘Kashmir; Restore democracy’

admin