• முகப்பு
  • மாநில செய்திகள்
  • நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளருக்கு SDPI கட்சியிடம் ஆதரவு கோரி வசந்தகுமார் எம்.பி.,வருகை
மாநில செய்திகள்

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளருக்கு SDPI கட்சியிடம் ஆதரவு கோரி வசந்தகுமார் எம்.பி.,வருகை

நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி., காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு நிர்வாகி அமீர் கான் ஆகியோர் இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாவட்ட அலுவலகம் வருகை தந்து மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களை நேரில் சந்தித்து ரூபி மனோகரனுக்கு ஆதரவு கோரினார்.

இச்சந்திப்பின் போது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயலாளர் அஹமது நவவி, நெல்லை மாவட்ட தலைவர் கனி, காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

உயர் அழுத்த மின்கோபுர திட்டத்திற்கு எதிரான விவசாய கூட்டமைப்பினர் கைது! எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

admin

வாளையார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை SDPI மாநில தலைவர் சந்தித்து ஆறுதல்

admin

கும்பல் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியினர் கைது – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin