மாநில செய்திகள்

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் வாழ்த்து

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியாவை சேர்ந்த அபிஜித் பானர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. அபிஜித் பானர்ஜியுடன் எஸ்தர் டஃப்ளோ, மைக்கேல் கிரிமியர் ஆகியோருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கின்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உலகளாவிய வறுமையைப் போக்கும் வகையில், சோதனை அடிப்படையிலான அணுகுமுறையைக் கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டதற்காக அபிஜித் பானர்ஜி உள்ளிட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அபிஜித் பானர்ஜி உள்ளிட்டவர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான திறனை வியத்தகு முறையில் மேம்படுத்தியுள்ளனர். அவர்களின் ஓர் ஆய்வின் நேரடி விளைவாக, ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்தியக் குழந்தைகள் பயனடைந்துள்ளனர் எனவும் நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு மோடி அரசால் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பழிப்பைக் கடுமையாக எதிர்த்தவர் அபிஜித். இதற்கு முன்னர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பெற்ற அமர்த்தியா சென் போன்று, மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதார நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றார். இந்தியாவில் நிலவும் வறுமையை போக்க தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் விவசாய பொருட்களுக்கு கூடுதல் விலை தர வேண்டும் என்றும், அரசு மெத்தனம் காட்டாமல் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது பொருளாதார ஆய்வுகள் மூலம் தெரிவித்து வருவதோடு, இந்திய அரசுக்கு கோரிக்கையும் விடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் கோரிக்கை ஆளுநரால் நிராகரிப்பு? – தமிழக அரசு தெளிவுப்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

admin

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் – தமிழகம் உள்பட தேசம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

admin

பொரவச்சேரியில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் மீது தாக்குதல் – நேரில் சந்தித்து SDPI ஆறுதல்!

admin