மாவட்ட செய்திகள்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்

நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் என்று பேசியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இப்பேச்சை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சின்னக்கடை வீதியில் 18.10.2019 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவர் இத்ரீஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மாவட்ட துணை தலைவர் சீமான் சிக்கந்தர் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

மேலும் புகைப்படங்களை காண…

Related posts

SDPI கட்சியின் தொடர் போராட்டங்களுக்கு பிறகு அமையவிருக்கும் குடிநீர் குழாய்

admin

குடிநீர் இணைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண வலியுறுத்தி, புதுக்கோட்டை நகர SDPI சார்பில் கோரிக்கை மனு!

admin

கட்சியில் இணைந்த நீடுர் இளைஞர்கள்

admin