மாவட்ட செய்திகள்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்

நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காஷ்மீரை போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் சூழல் உருவாகும் என்று பேசியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இப்பேச்சை கண்டித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக 18.10.2019 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் முஸ்தஃபா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

Related posts

திருச்சியில் SDPI சார்பில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் வரலாற்று கண்காட்சி!

admin

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விஷம பேச்சை கண்டித்து மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கண்டன ஆர்ப்பாட்டம்

admin

அமித் ஷாவின் இந்தி மொழி திணிப்பு கருத்தை கண்டித்து சென்னையில் SDPI ஆர்ப்பாட்டம்

admin