• முகப்பு
  • பத்திரிக்கை அறிக்கை
  • ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் கோரிக்கை ஆளுநரால் நிராகரிப்பு? – தமிழக அரசு தெளிவுப்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
பத்திரிக்கை அறிக்கை மாநில செய்திகள்

ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் கோரிக்கை ஆளுநரால் நிராகரிப்பு? – தமிழக அரசு தெளிவுப்படுத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரைவை பரிந்துரையை ஏற்க இயலாது என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆளுநர் தெரிவித்துள்ளாக  செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த தகவல் உண்மை என்கிற பட்சத்தில் ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சாசன உரிமைக்கு எதிரானது, கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதன் உண்மைத் தன்மை குறித்து உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே நீட் விலக்கு தொடர்பான தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் இழுத்தடிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், நீதிமன்ற விசாராணையின் போதுதான் அந்த மசோதா நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக காலதாமதமாக தகவல்கள் வெளியாகின.
தற்போது 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசு அதன் உண்மைத் தன்மை குறித்து தமிழக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். அதுகுறித்த தகவலை தமிழக அரசு மறைக்காமல் வெளியிட வேண்டும்.
ஏற்கனவே 2014, 2016 ஆகிய ஆண்டுகளிலும் 7 தமிழர்களை  விடுவிக்க கோரும் தமிழக அமைச்சரவை முடிவு ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நிராகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களையும்  கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாகும்   ஆகவே, அந்த கோரிக்கையை நிறைவேற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாறாக அதனை நிராகரித்திருக்கும் செய்தி என்பது அரசியல் சாசன உரிமைக்கு எதிரானது. ஆகவே தமிழக மக்களின் கோரிக்கையை ஆளுநர் செவிமடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு SDPI கட்சியின் மாநில தலைவர் வாழ்த்து

admin

ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தில் சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம் | SDPI பங்கேற்பு!

admin

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் – ஏற்புடையதல்ல: எஸ்.டி.பி.ஐ.

admin