பத்திரிக்கை அறிக்கை

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

admin
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நக்கீரன் பத்திரிக்கை இதழின் ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர்  கோபால் அவர்களை தேச துரோக சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில்
பத்திரிக்கை அறிக்கை

செங்கோட்டை: காவல்துறை அலட்சியத்தால் நிகழ்த்தப்பட்ட இந்துமுன்னணி கலவரம்! பாதிக்கப்பட்ட மக்களை அநீதிக்குள்ளாக்கும் காவல்துறை! அப்பாவிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

admin
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த செப்.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பெயரால் முஸ்லிம்களின் சொத்துக்களை
பத்திரிக்கை அறிக்கை

சிறையில் தோழர் திருமுருகன் காந்திக்கு தொடரும் மனித உரிமை மீறல்!

admin
எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கண்டனம் ___________________ இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியை தனிமை சிறையில் அடைத்து வைத்துள்ளதோடு,
பத்திரிக்கை அறிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பான ழக அமைச்சரவையின்தமி பரிந்துரையை உள்துறைக்கு அனுப்பிய தமிழகஆளுநர்!

admin
ஆளுநரின் செயல்பாடு ஏழு தமிழர்களின் விடுதலையை தாமதிக்கும் உள்நோக்கம் கொண்டது – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் குற்றச்சாட்டு ___________________________   இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;   பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் அவர்களை மாநில ஆளுநர் ஒப்புதலுடன்தமிழக அரசு விடுவிக்கலாம் என்று கடந்தவாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரைவிடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்தவிடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எதுவும் எடுக்காமல் இருந்த நிலையில், அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறைஅமைச்சகத்துக்கு நேற்று அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஆளுநரின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி, ஏழு தமிழர்களின் விடுதலையை தாமதிக்கும் உள்நோக்கம் கொண்டதாகதெரிகிறது. ஏற்கனவே ஏழு தமிழர்களின் விடுதலையை உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசிடமே மீண்டும் ஒப்புதல் கேட்பது என்பதுஉச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும்  செயலாகும். ஏழு தமிழர்களின் விடுதலை முடிவை மத்திய அரசைக் கேட்டுத்தான் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லாத போது, தமிழக ஆளுநரின் இந்த செயல் அதிர்ச்சியளிக்க கூடியதாக உள்ளது.   அரசியல் சட்டப் பிரிவு 161 இன்படி குறிப்பிட்ட சில வழக்குகளில், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கவும் தண்டனையை நிறுத்தி வைக்கவும் குறைக்கவும்அல்லது ரத்து செய்யவும் ஆளுநருக்கு அதிகாரங்கள் உள்ளன என்று மரு ராம் எதிர் இந்திய அரசு (1980) மற்றும் கேஹர் சிங் எதிர் இந்திய அரசு (1988) ஆகியவழக்குகளின் விசாரணையில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்புகளில் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் அமைச்சரவையின்ஆலோசனையின் படிதான் நடக்க வேண்டுமே அன்றி தன்னுடைய விருப்பப்படி நடக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.   ஆகவே, தமிழக ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து ஏழு பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு உடனடியாகஒப்புதல் அளிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.   இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை அறிக்கை

காவல்துறை மெத்தனம்: வந்தவாசியில் முஸ்லிம்கள் பகுதி மீது இந்துமுன்னணி தாக்குதல்!

admin
உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி காவல்துறையிடம் முறையிட்டவர்கள்  கைது! – காவல்துறை நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம் ______________ இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர்