• முகப்பு
  • மாவட்ட செய்திகள்
  • தென்காசி-செங்கோட்டையில் தொடர் அமைதி நிலவ வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய ஈழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் SDPI கட்சி மனு !
மாவட்ட செய்திகள்

தென்காசி-செங்கோட்டையில் தொடர் அமைதி நிலவ வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய ஈழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் SDPI கட்சி மனு !

நெல்லை மாவட்டம் தென்காசி-செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இந்து முன்னணி ஃபாசிஸ்டுகளால் நகரின் அமைதி முழுவதுமாக சீர்குலைந்துள்ளது. கலவரத்திற்கு காரணமான இந்து முன்னணி மற்றும் சங்பரிவார்களை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இரு சமூகங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கலவர கும்பல்களினால் சேதப்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், வாகனங்கள், ஆகியவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் தலைமையில் சென்று மனு அளிக்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அஹமது நவவி, நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, நெல்லை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் ஷாஹுல் ஹமீது உஸ்மானி, பொதுச் செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான், மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பர்கிட் அலாவுதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கோட்டூர் ரத்தீஸ், வழக்கறிஞரணி மாவட்ட செயலாளர் ஆரிப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதாம் உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

SDPI கட்சியின் தொடர் போராட்டங்களுக்கு பிறகு அமையவிருக்கும் குடிநீர் குழாய்

admin

வத்தலகுண்டில் நிலவேம்பு கசாயம் விநியோகம் திண்டுக்கல் கிழக்கு டெங்கு நிலவேம்பு

admin

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து களியக்காவிளையில் போராட்டம் எஸ்டிபிஐ பங்கேற்பு

admin

Leave a Comment