வழக்கறிஞர் அணி செய்திகள்

வழக்கறிஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்

SDPI கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று(ஜன.14) மதுரையில் உள்ள அண்ணபூர்ணா ஹோட்டலில் வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் வழக்கறிஞர். அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. மாநில பொருளார் வழக்கறிஞர் சுலைமான் பாட்ஷா பொதுக்குழுவிற்கு வருகை தந்த அனைத்து வழக்கறிஞர்களையும் வரவேற்றார்.

இப்பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, வழக்கறிஞர் அணியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜா முகம்மது நமது பயணங்களும் இலக்குகளும் என்ற தலைப்பிலும், மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் அலாவுதின் பார் கவுன்சில் தேர்தலின் நடைமுறையும் செயல் திட்டமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பின்பு சிறப்பாளராக கலந்து கொண்ட முஸ்லிம் லா அகாடமி நிறுவன தலைவர் ஷாஹங்கிர் பாட்ஷா வழக்கறிஞர் அணியின் பணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது ஆதரவை கூறினார்.

மேலும் இப்பொதுக்குழுவில் SDPI கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Related posts

தூத்துக்குடியில் நடைபெற்ற சட்டவிழிப்புணர்வு முகாம்

admin

வேலூரில் வழக்கறிஞர்கள் நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

admin

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணியின் சட்டக்கருத்தரங்கம்

admin

Leave a Comment