SDTU தொழிற்சங்கம் செய்திகள்

எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (எஸ்.டி.டி.யூ.) தொழிற்சங்கத்தின் தமிழ் மாநில பொதுக்குழு கோவை செரீப் கூட்ட அரங்கில் செப்டம்பர்.30 அன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் அ.முகம்மது பாரூக் தலைமை தாங்கினார். மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் தேசிய ஒருகிணைப்புக்குழு தலைவர் கே.கே அப்துல் ஜப்பார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் அப்துல் கரீம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பொதுக்குழு கூட்டத்தின் துவக்கமாக தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் கார்மேகம் வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் யு.பி.அஜித் ரஹ்மான் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனநாயக அடிப்படையில் எஸ்.டி.டி.யூ. சங்கத்தின் அடுத்த மூன்று ஆண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை சங்கத்தின் சங்கத்தின் தேசிய ஒருகிணைப்புக்குழு தலைவர் கே.கே அப்துல் ஜப்பார் அறிவிப்பு செய்து அறிமுகப்படுத்தினார்.

அதன்படி எஸ்.டி.டி.யூ சங்கத்தின் மாநில தலைவராக அ.முகமது பாரூக், பொதுச்செயலாளராக யு.பி.அஜித் ரஹ்மான், துணைத் தலைவராக பூட்டோ சாகுல், பொருளாளராக பி.கார்மேகம், செயலாளராக எம்.ஒய்.எஸ். அப்துல் காதர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைத்திட வேண்டும். துப்புரவு தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்டு, அத்தொழிலில் ஈடுபடுவோருக்குப் பாதுகாப்பு உபகரணங்களை உடனே வழங்க வேண்டும். ஏழை மோட்டார் வாகன தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் ஒலா, உபேர் உள்ளிட்ட சர்வதேச தனியார் நிறுவனங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். நடைபாதை வியாபாரிகளின் நலனை பாதுகாக்க அவர்களை கணக்கெடுப்பு செய்து, அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலை நடத்த வேண்டும். தமிழக மின்வாரியத்தை படிப்படியாக தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு இல்லாத, தொழிலாளர்களுக்கு விரோதமாகக் கொண்டு வந்துள்ள கால நிர்ணய முறையை திரும்பப்பெற வேண்டும். புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. உயர்த்தப்பட்ட வாகனக் காப்பீட்டு கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். கோவையின் குடிநீர் சேவையை தனியாரிடமிருந்து தமிழக அரசு உடனே திரும்பப்றெ வேண்டும் ஆகிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Related posts

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவையில் எஸ்.டி.டி.யூ. சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!

admin

எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைமையகத்தில் தேசத்தின் 72வது சுதந்திர தின கொண்டாட்டம்

admin

அஞ்சலக ஊழியர்கள் போராட்டத்தில் SDTU

admin

Leave a Comment