வர்த்தகர் அணி செய்திகள்

சென்னை மாவட்ட #SDPI கட்சி #வர்த்தகர் அணியின், வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இராயபுரத்தில் நடைபெற்றது!

சென்னை மாவட்ட SDPI கட்சி வர்த்தகர் அணியின், வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் அவர்கள் தலைமையில் இராயபுரத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, தங்களுடன் இச்சந்திப்பானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தகர்களின் முன்னேற்றத்திலும், அவர்கள் மூலமாக இச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் SDPI கட்சி தேசிய அளவில் முயற்ச்சிகளையும், முன்னேற்றங்களை அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு வலுவான கட்டமைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதில் தாங்கள் முழு மனதோடு பங்கு கொண்டு மிகுந்த வீரியத்தோடு செயல்பட்டு வருகிறீர்கள் என்பதை நாள் தோறும் அறிந்த வண்னமாக இருக்கிறேன் என்று பேசினார்.
முன்னதாக கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்ஸா வாழ்த்துரை வழங்கினார்கள் உடன் கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கறீம், வர்த்தகர் அணி மாநில செயலாளர் அஜ்மல் கான், மாநில துணை செயலாளர் கலீல் ரஹ்மான், வர்த்தகர் அணி மாநில பொருளாளர் லோகநாதன் மற்றும் வர்த்த்கர் அணி சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

நவம்பர் 28 பாரத் பந்த் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் – மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து கோவையில் நடைபெற்ற ”பாரத் பந்தில்” பிச்சை எடுத்து போராட்டத்தை வலுப்படுத்தியது SDPI.

admin

வர்த்தகர் அணி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி

admin

SDPI கட்சியின் மாநில பொருளாளர் இல்லத் திருமண விழா

admin

Leave a Comment